Date:

சமையல் அறைக்குள் புகுந்து உணவை திருடி தின்ற நபர் – பொலிஸில் முறைப்பாடு

கேகாலை தேவாலகம பிரதேசத்தில் வீடொன்றின் சமையல் அறைக்குள் புகுந்த திருடன், அங்கிருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, மரக்கறிகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரான பெண் தனது மகளுடன் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த போது, சமையல் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்த நபர் அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுள்ளதுடன் மரக்கறிகளை திருடிச் சென்றுள்ளார்.

இரவு சாப்பிடுவதற்காக சம்பல், நெத்திலி பொறியலும் காலையில் சாப்பிட சீனி சம்பலும் தயாரித்து வைத்திருந்துள்ளனர். இரவு சாப்பிட்டு விட்டு நித்திரைக்கு சென்ற இந்த சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலை பார்க்க மஹிந்தவும் வந்தார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக...

ரணிலை பார்க்க சிறைச்சாலை வந்த சஜித்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித்...

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய...

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம்...