Date:

தாமரைக் கோபுரத்தை பார்வையிட நாளொன்றுக்கு 2000 பேருக்கு நுழைவுச்சீட்டு!

கொழும்பு தாமரைக் கோபுரத்தை பார்வையிட நாளை முதல் நாள் ஒன்றுக்கு 1400 முதல் 2000 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்கள் ரூ.500 மற்றும் ரூ.2,000 கட்டணங்களில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 200 ரூபாயெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 20 அமெரிக்க டொலராகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடலாம்.

கொழும்பு தாமரைக் கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...