Date:

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா பெற்றுக்கொள்வார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தில் மாணவர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே சுமார் 170 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...