Date:

டொலர் இன்றி காத்துகிடக்கும் எரிபொருள் கப்பல்கள்! மீண்டும் வரிசை யுகம் தொடருமா?

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்துவதற்கான இயலுமை இல்லை.

அதனை தவிர மேலும் 2 டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவரிடம் வினவிய போது, கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்குரிய டொலரை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...