Date:

இறக்குமதி செய்யப்படும் அரிசி தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என தாம் கருதுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி உற்பத்தியில் இந்த நாட்டில் பயன்படுத்தப்படாத இரசாயனங்கள் மற்றும் தரக்குறைவான உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எனவே, இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதர்களை விட விலங்குகளுக்கு ஏற்றது, எனவே கால்நடை தீவன பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய வர்த்தமானி அறிவித்தலை நீக்கினால் அந்த அளவு அரிசியை கால்நடை பாவனைக்கு பயன்படுத்த முடியும் என்றார்.

இந்நாட்டு மக்களுக்கு தேவையான அரிசியை வழங்குவதற்கு இந்நாட்டு விவசாயிகள் பலமடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...