வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர் .
வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த திருவிழா இன்று இடம்பெற்றது .
பல்லாயிரக கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேரத்திக் கடன்களை நிறைவேற்றினர் .
தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியள்ளனார் தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர் .
நாளைய தினம் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது . எனவே அடியவர்கள் தமது நகைகள் மற்றும் பணத்தில் ‘ அவதானம் தேவை என்று பொலிஸார் கேட்டுள்ளனர் .