கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை ரன்வல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் குறித்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு இடம் பெற்றதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் மோதிய நிலையிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.