மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் ஆடைத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக Ethical Trading Initiative (ETI) மற்றும் American Apparel அமெரிக்க ஆடை மற்றும் பாதணி சங்கம்-AAFAஇன் பதிலுக்கு கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
ETI ஆனது இலங்கையிலுள்ள பொருளாதார நிபுணர்கள், தொழில் சங்கங்கள், பணியாளர் பிரதிநிதிகள் மற்றும் அங்கத்துவ நிறுவனங்களுடன் இணைந்து தொழிலாளர்கள், வழங்குநர்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான பொருளாதார அழுத்தங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படும். முதற்கட்ட நடவடிக்கையாக உலர் உணவுகள், மருந்துகள், மளிகைப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்கும் சட்டத்திற்கு இணங்குவதற்கும் சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்ற AAFA உறுதிபூண்டுள்ளது.
ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதற்கு தொழில்துறை முன்னுரிமை அளிக்கிறது. இது போன்ற நெருக்கடியான காலங்களில், தொழில்துறையால் ஏற்கனவே எடுக்கப்பட்ட பணியாளர் நலன்புரி நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும், மேலும் இந்த கூட்டு நடவடிக்கையை JAAF பாராட்டியுள்ளது. சில தொழிற்சாலைகள் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன, ஏனைய தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களுக்கு வீட்டிற்கு கொண்டு செல்ல மேலதிக உணவை வழங்குகின்றன, இதனால் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவளிக்க உதவுகிறார்கள். சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடசாலை புத்தகங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன.
“ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஜூன் 2022க்குள், சுமார் 80% ஆடை உற்பத்தியாளர்கள் ஆண்டு ஊதிய உயர்வுக்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அதிகரித்துள்ளனர். இது 25% அதிகரிப்பு மற்றும் இந்த அதிகரிப்புகள் 2021இல் இருந்து நடைமுறைக்கு வருகிறது.” என JAAF பொதுச்செயலாளர் யொஹான் லோரன்ஸ் கூறினார்.
இலங்கையில் இருந்து ஆடைகளை கொள்வனவு செய்யும் சர்வதேச ஆடை வர்த்தக நாம பிரதிநிதிகளின் இந்த நடவடிக்கை இலங்கைக்கும் வழங்குநர்களுக்கும் இடையில் பல வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையான உறவை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் அதேவேளையில் இது போன்ற சவாலான காலங்களில் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தியைத் தொடர நிறுவனங்களின் வலிமை மற்றும் பின்னடைவை JAAF பாராட்டுகிறது. மேலும் ETI மற்றும் AAFA வழங்கிய ஆதரவைப் பாராட்டி, JAAF தொழில்துறைக்கு ஆதரவளிக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Date:
நெறிமுறை நிறுவன அணுகுமுறை (ETI) மற்றும் அமெரிக்க ஆடை மற்றும் பாதணிகள் சங்கம் (AAFA) ஆகியன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பதிலளிப்பதை வரவேற்கிறது JAAF
