Date:

பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நபரை பாழடைந்த பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இவர் சிகிச்சைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...