முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, நாடு திரும்புவதற்கு தேவையாக பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.