Date:

ரீலோட் செய்ய கடைக்கு சென்ற 7 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட கொடூர சம்பவம்..!

7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று (31) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கந்தகெட்டிய- களுகஹகதுர என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவனே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் ஐவர் அடங்கிய  குழுவொன்று சத்திரசிகிச்சையை முன்னெடுத்துள்ளதுடன், சிறுவன் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவனின் தந்தை, தான் பிள்ளையின் கையில் 100 ரூபாயைக் கொடுத்து மீள் நிரப்பும் அட்டையை கொள்வனவு செய்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
கடைக்குச் செல்லும் வீதி மிகவும் சிறியது. இரண்டு புறங்களிலும் காடுகள் உள்ளதாகத் தெரிவித்த அவர்,  மகன் கடைக்குச் சென்று 5 நிமிடங்களில் சத்தமிட்டார்.நாங்கள் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா என பயந்து ஓடினோம்.
அப்போது தமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் ஒருவர் அங்கிருந்து ஓடியதை அவதானித்தோம் என்றார்.
தனது மகன் கடைக்குச் செல்ல முன்னர்  சந்தேகநபர் தம்  வீட்டுக்கு வந்துவிட்டு சென்றதாக  தந்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் காயமடைந்த மகனை மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு சென்று. அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் என்றார்.
51 வயதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...