மரத்திலிருந்து தேங்காய் விழுந்த நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நமுனுகுல மியனகந்துர பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் தந்தை மரத்திலிருந்து தேங்காய் பறிக்கும் போது தேங்காய் தவறி சிறுவன் மீது விழுந்த நிலையிலே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மியனகந்துர மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு உயிரரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த சிறுவன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
அத்துடன் கவனக்குறைவாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டில் சிறுவனின் தந்தை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.