Date:

மலையக மக்களின் பிரச்சனைகளை எடுத்து காட்டும் ‘1000rs ’

மலையக மக்களின் பிரச்சனைகளை உற்றுநோக்கினால் வீடு மற்றும் காணி உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சனைகளை அடுக்கடுக்காக கூறிக்கொண்டே போகமுடியும். இவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகக் காணப்படுகிறது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் கூட மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் கிடைப்பது வெறும் 730 ரூபாய் சம்பளம் மாத்திரமே.

இவ்வாறு தொடர்சியாக ஏமாற்றத்திற்குள்ளாகிவரும் தோட்டத் தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை சமாளிக்கமுடியாது மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்கள் எதிர்நோக்கி வரும் பொருளதார ரீதியிலான பிரச்சனைகளை வெளிக்காட்டும் விதமாக இயக்குனர் ஜெரோன்அபினாஷின் இயக்கத்தில் jk production YouTube தளத்தில் ‘1000rs ’ என்ற குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது

இக் குறுந்திரைப்படத்தில்அரவிந்த் , எனோக் , திவா, டில்ஷான் , இஷுறு ,தனுக்ஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...