எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் சேவைகள் இன்று முதல் பாதிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ்களுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், அவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கடந்த நான்கு நாட்களாக எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் கிடைக்காத நிலையில் இன்று முதல் 20 வீதமான பஸ்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்த முடியுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதனிடையே போதியளவு எரிபொருள் இன்மை காரணமாக . பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையினை உரியமுறையில் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.