Date:

நாளை முதல் தனியார் பேருந்துகள் மட்டு

எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பேருந்துகளின் ஓட்டம் 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைதூரப் பேருந்துகளும் 25% ஆகக் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று (28) தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(29) பேரூந்துகள் முழுமையாக இயங்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு, ஏற்றுவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களின் ஆர்டர்களை தாமதமாக செலுத்துவதே எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் நிற்பதற்கு காரணம் எனவும், அவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அடுத்த 3 நாட்களில் இந்த விடயத்தினை மறுஆய்வு செய்து அனைத்து எரிபொருள்களதும் கூடுதல் இருப்புகளையும் விநியோகிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...