லங்கா சதொச 12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக இலங்கை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒருவருக்கு வழங்கும் அரிசி மற்றும் சீனியின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் ஒருவருக்கு வழங்கப்படும் 3 கிலோ அரிசியின் அளவு 5 கிலோவாகவும், சிவப்பு சீனி 2 கிலோவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் லங்கா சதொசவில் போதுமான பொருட்கள் இருப்பதாகவும் விநியோகத்தில் பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.