அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவது தொடர்பான வேலைத்திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
அண்நிய செலாவணியை உயர்த்துதல் மற்றும் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சிக்கல்களை நிவர்த்திப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளார்.
இதன்போது, அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவது தொடர்பான பொது நிர்வாக சுற்று சுற்றறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்ளுவது உள்ளிட்ட 6 விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்மூலம், வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதற்கு, வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும், விதவை மற்றும் அனாதை ஓய்வூதியத்திற்கான பங்களிப்புகள் பெறப்பட்டு, வங்கிக் கடன் தவணைகளை செலுத்தும் வகையில் கணக்குகளை இணைக்கும் முறையான அமைப்பை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.