Date:

மிளகாய் பொடியை எறிந்துவிட்டு தங்கச் சங்கிலி அபகரிப்பு

குடியிருப்புக்கு பின்னால் இருந்த சமயலறையில் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலி இனந்தெரியாத நபரொருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை எறிந்துவிட்டு அதனை களவாடி சென்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் (17) நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை எறிந்துவிட்டு தங்க சங்கிலியை இனந்தெரியாத நபர் அபகிரித்துச் சென்றுள்ளார். இதன்போது பெண் கூச்சலிட அயலவர்களும் ஓடி வந்து திருடனை தேடியபோது அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு சந்தேக நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...