இரத்மலான கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்மலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.