யாழ்ப்பாணத்தில் அதிசய கோழிக்குஞ்சு பொரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள மகாராஜா கௌரி என்பவரின் வீட்டிலேயே கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது.
குறித்த குடும்பப் பெண் கோழி வளர்ப்பினையே ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றார்.
இவரது வீட்டில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கோழிக்குஞ்சு இன்று (15) முற்பகல் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது