Date:

நாளை முதல் 19 வரை 3 மணிநேரம் மின்வெட்டு- பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

நாளை 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதோடு, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரை மின்துண்டிப்பு அமுலாகும் எனவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...