Date:

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரசுக்கு எதிரான பேரணியில் இருந்து விலகிய மரைக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள்...

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி!

இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர்...

ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய...

மாலைத்தீவில் சிக்கிய இலங்கை படகு தொடர்பில் திடுக்கிடும் தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்ததை மாலைத்தீவு...