Date:

ரெட்டாவின் வங்கிக் கணக்கில் 05 மில்லியன் ரூபா

அரகலய’ எனப்படும் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் பிரபலமான ‘யூடியூபரு’மான ‘ரட்டா’ என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன, தனது வங்கிக் கணக்கில் 05 மில்லியன் (50 லட்சம்) ரூபா பணம் – அறியப்படாத நபர்களால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோரப்படாத இந்தப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரட்டா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் – இவர் கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...