Date:

தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு

பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைநகர் பேங்கொக்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ளதாக பேங்கொக் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தை சென்றடைந்தார்.

பேங்கொக்கின் டொன் மியுங் விமான நிலையத்தை, அன்றிரவு 8 மணியளவில் சென்றடைந்த அவரை, தாய்லாந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அழைத்துச் சென்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைவிடம் வெளியிடப்படாத விருந்தகம் ஒன்றில் அவர் தங்கியுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவுப் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸார் சிவில் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பேங்கொக் போஸ்ட் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், விருந்தகத்திலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்ற வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விசா விலக்கு தொடர்பான 2013 ஒப்பந்தத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 90 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும்.

முன்னோக்கி பயணிக்கும் நோக்கத்துடன் தங்குவது தற்காலிகமானது என்றும், அரசியல் தஞ்சம் கோரப்படவில்லை என்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டெனி சங்ரட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, தாய்லாந்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு, தற்போதைய இலங்கை அரசாங்கத்தினால், தாய்லாந்து அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...