கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,400 ரூபா வரையில் அதிகரிக்கலாம் எனவும், முட்டையொன்றின் விலையானது 70 ரூபா வரையில் உயருமெனவும் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் கோழி தீவனம் இறக்குமதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையே இதற்கு காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.