நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன 3 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி குறித்த மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகாவலி ஆற்றின் கம்பளை – மொரகலை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் காணாமல் போன மேலும் இரண்டு பேரை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.