Date:

நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பெண்ணுக்கு அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தின் எதிர்ப்பு உள்ளடக்கத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

எனவே அவர் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கெய்லி பிரேச விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம கைப்பற்றியிருந்தது.

விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது அவர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...