Date:

ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02) பிற்பகல் குறித்த மரம் விழுந்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், கொட்டகலை முதல் போகாஹவத்தை வரையான மாற்று வீதியை தோட்ட பாதையின் ஊடாகப் பயன்படுத்துமாறு  பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளும் கொட்டகலை பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து வீழ்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

வீதியின் நடுவே விழுந்த மரத்தில் இருந்த பல பெரிய குளவி கூடுகள் கலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...