Date:

மேலும் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மேலும் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) பிற்பகல் 3 மணி முதல் இன்று (08) பிற்பகல் 3 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்காக நாவலப்பிட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

இதேவேளை, மண்சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் நாளை (09) முதல் வழமைக்குக் கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையில் மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயக்கப்படவிருந்த பல ரயில் பயணங்கள் அண்மையில் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...