MonkeyPox தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் MonkeyPox தொற்று நாட்டில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதுவரை நாட்டில் MonkeyPox தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.