கடந்த இருபது நாட்களுக்குள் 2.2 மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தையில் 3.5 மில்லியன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிடம் கடந்த மே 19 ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து, 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய முதலாவது கப்பல், ஜூலை 11 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. அதன் பின்னார் நாட்டில் தொடர்ந்து எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.