பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த ஜூடோ வீரர் ஒருவரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பர்மிங்காம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் காணாமல் போனதற்கு முந்தைய நாள் இரவு ஜூடோ வீராங்கனை தனது தோழிகளுக்கு ‘மன்னிக்கவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.