நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அரிசி, மாவு, சீனி, பருப்பு, போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி. கொடிகார கூறினார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 10 பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.