இலங்கையின் பிரபல யூடியூபரான ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நபர்கள் கடந்த மே 30 அம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் மற்றம் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.