நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் நில்வல மற்றும் களு கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, அலபத ஆகிய பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, கொட்டபொல, பிடபத்தர ஆகிய பிரிவுகளிலும் மற்றும் அக்குரஸ்ஸ, மாலிம்பட, மாத்தறை, கம்புருப்பிட்டிய, முலட்டியன மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடுத்த 24 மணித்தியாலங்களில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் அவ்வழியாக பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.