மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிட்டு இ-பில் சேவையைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பதிவு உறுதிப்படுத்தலை SMS மூலம் பெறலாம்.
“EBILL” என்று கணக்கு எண்ணை டைப் செய்து 1989 க்கு அனுப்புமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.