கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் பஸ்பொட்டா என்பவர் முன்னதாக கொல்லப்பட்டதுடன், இன்று உயிரிழந்த 52 வயதுடைய நபர் அவரது நெருங்கிய உறவினர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.