Date:

இலங்கையில் இனங்காணப்பட்ட புதிய வைரஸ்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொவிட் வைரஸ் பிறழ்வானது நாட்டில் ஒரு மோசமான நிலைமையை உருவாக்கக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

BA5 எனப்படும் ஒமிக்ரோன் உப பிறழ்வு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாக அவர் தெரிவித்தாா்.

“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள எங்கள் நிறுவனத்தின் சமீபத்திய மரபணு ஆய்வின்படி, இலங்கையில், குறிப்பாக கொழும்பைச் சுற்றிய பகுதிகளில், BA5 எனப்படும் ஓமிக்ரான் உப பிறழ்வு மிகவும் பரவலாகக் கண்டறிந்துள்ளது. இது முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் தற்போது கொவிட் பரவல் வேகமாக பரவுவதற்கு காரணம் இந்த பிறழ்வாகும். கொவிட் -19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் பிறழ்வு இதுவாகும். எனவே, ஆபத்து உள்ளது. எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.”

இதேவேளை, நேற்று இலங்கையில் புதிதாக 143 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதுடன், 28 ஆம் திகதி இடம்பெற்ற 05 கொவிட் தொற்று மரணங்களும் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...