Date:

சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்த 24 பேர் கைது; எரிபொருள் விநியோகத்தில் அறிவுறுத்தல்கள்

 

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை  கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை உரிய திணைக்களங்களின் சரியான ஒருங்கிணைப்புடன் தீர்த்து வைக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

606 லீற்றர் பெற்றோல் மற்றும் 6,610 லீற்றர் டீசல் இதன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373