Date:

எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து?

எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பஸ் உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களின் வாயிலாக டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

எனினும் டீசலை பெற்றுக்கொண்டு சில தனியார் பஸ்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு சேவையில் ஈடுபடாதவர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரம் விரைவில் இரத்து செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...