நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மருந்துகளை தொழிநுட்ப முறைமையின் கீழ் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மருந்துப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.