Date:

ஜனாதிபதி அலுவலகம் நாளை முதல் இயங்கும்

மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜூலை 9 அன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.

“கோட்டை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது, மேலும் குற்றவியல் அதிகாரிகள் (SOCO) மற்றும் சிறப்பு கைரேகை புலனாய்வு அதிகாரிகள் மூலம் தடயவியல் சான்றுகள் ஜனாதிபதி செயலகத்தில் சேகரிக்கப்படும்” என்றுபொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட மேலும் பல பேருந்து சேவைகள் நிறுத்தம்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...