Date:

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டில் இன்றும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொழும்புக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு 25 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு 75 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிவாயு பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...