கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அனைத்தும் தற்போது பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பொலிஸ், இராணுவத்தினர் சகிதம் வீதித் தடைகளை நிறுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர், அந்தப் பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொது அமைதியை பாதுகாக்க ஆயுதப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.