நாட்டின் 8 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில் புதிய ஜனாதிபதி செயற்படுவார் என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய நலனுக்காக செயற்படாமல் பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.