இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மேலும் எரிவாயு இறக்குமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“இந்த மாத இறுதிக்குள் நெருக்கடி முழுமையாக தீர்க்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை மாத இறுதிக்குள் இலங்கையில் சுமார் 6-7 எரிவாயு இறக்குமதிகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை நிறுவனம் பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்