கொழும்பு – மட்டக்குளியவில் 5 வயதான சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 28 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அந்நபருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக 05 மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் தாய் வௌிநாட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றவர், சிறுமியை சித்திரவதை செய்து, அதனை ஔிப்பதிவு செய்து தாய்க்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தையை புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.