இன்று(19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒப்பீட்டளவிலான வீதத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, பஸ் கட்டணத் திருத்தங்களை மேற்கொள்ள தயார் என பஸ் சங்கங்கள் நேற்று(18) தெரிவித்திருந்தன.