Date:

HNBஇன் ‘உங்களுக்காக நாம்’ வேலைத்திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள்

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, இந்த நெருக்கடியான காலத்தில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ‘உங்களுக்காக நாம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை அண்மையில் வழங்கியது.

நாட்டில் இன்று நிலவும் மருந்துப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று நோயின் பின்னர், தமது நாளாந்த சம்பளத்தை தன்னார்வமாக வழங்குவதற்காக வங்கியின் ஊழியர்களால் உருவாக்கப்பட்ட ‘உங்களுக்காக நாம்’ நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து HNB தொடர்ந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வருகிறது. HNB உதவிப் பொது முகாமையாளர் – வியூகம் திருமதி பிரியங்க விஜேரத்னவினால் மருந்துப் பொருட்களை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சந்துசித சேனாபதியிடம் கையளித்ததுடன் HNB சட்டப் பிரிவின் பிரதானி திருமதி ஷிரோமி ஹலோலுவ அவர்கள் மருந்துப் பொருட்களை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கையளித்தார்.

“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நமது சுகாதாரத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மருத்துவமனைகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் நிதியின் முதல் தவணை எதிர்கால சந்ததியினருக்கு மருந்துகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் சுகாதாரத் துறையிலுள்ள ஏனைய துறைகளுக்கும் நாங்கள் உதவுவோம்.” என HNB பிரதி பொது முகாமையாளர் CHRO / தலைமை மாற்ற அதிகாரி எல்;. சிரந்தி குரே தெரிவித்தார்.

HNBஇன் பேண்தகைமை அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும், உங்களுக்காக நாம் திட்டமானது HNB ஊழியர்களால் நிதியளிக்கப்படுகிறது, அவர்கள் கடந்த ஆண்டு தொற்றுநோய் ஏற்பட்ட காலத்தின் தொடக்கத்தில் தங்கள் நாள் ஒன்றின் சம்பளத்தை முன்வந்து வழங்கினர். இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஊழியர்கள் நன்கொடையாக வழங்கிய அதே தொகையை வங்கியும் வழங்கியது, அதன் பின்னர் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

HNBஆல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகளை உடனடியாக வழங்கியுள்ளதுடன், புத்தளம் ஆதார வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலை ஆகியனவும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் மூலம், கோவிட் தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில், HNB நாடு முழுவதும் உள்ள பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு (MOHs) அத்தியாவசிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்கியது.

குறிப்பாக, ‘Oba Wenuwen Api’ (உங்களுக்காக நாம்) திட்டத்தின் கீழ், HNB பேண்தகைமை அறக்கட்டளை கடந்த ஆண்டு நாட்டிலுள்ள நுண் தொழில்முனைவோர்களுக்கு புத்துயிர் அளிக்க 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...

ரம்புட்டான், மங்குஸ்தான் உட்கொள்ளும் மக்களிடம் விசேட கோரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும்...

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...