3,700 மெட்ரிக் டன்கள் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் இலங்கைக் கடற்கரையை வந்தடைந்ததன் பின்னர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கைகளில் சிக்கல்கள் இல்லாவிட்டால் எரிவாயுவை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.